தமிழகம்

மூன்றாம் வகுப்பு பள்ளி மாணவியிடம் ஆசிரியர் செய்த கொடூர செயல்! இரத்தம் சொட்ட வீட்டிற்கு சென்ற மாணவி!

Summary:

school teacher cut a school girl hand

நாகை மாவட்டம் செம்பனார்கோவில் அருகே கீழையூரில் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் அதே பகுதியை சேர்ந்த 8 வயது சிறுமி பவித்ரா மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார். பவித்ரா மாற்றுத்திறனாளி மாணவி என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில், நேற்று பள்ளியில் இருந்து வீடு திரும்பிய பவித்ரா கைகளில் ரத்த காயங்கள் இருந்ததை கண்டு பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். அவரிடம் விசாரித்தபோது, சரியாக படிக்கவில்லை என்று ஆசிரியர் பாஸ்கர் என்பவர் தன்னை கத்தியால் கையில் கிழித்ததாக கூறினார்.

இதனையடுத்து பவித்ராவை சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சேர்த்துவிட்டு,  செம்பனார்கோவில் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அவர்களின் புகாரை ஏற்ற போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஆசிரியர் பாஸ்கரை கைது செய்தனர் 
 


Advertisement