தமிழகம்

மாணவியை ஆபாச வார்த்தையில் திட்டிய ஆசிரியை. மனம் நொந்து மாணவி எடுத்த விபரீத முடிவு.

Summary:

School student suicide attempt in rameshwaram

ராமேஸ்வரம் மாவட்டம் அருகே உள்ள நடராஜபுறம் என்னும் பகுதியை சேர்ந்தவர் 9 ஆம் வகுப்பு மாணவி காளீஸ்வரி. இவர் அருகில் உள்ள அரசு உயர்நிலை பள்ளியில் படித்துவருகிறார். இந்நிலையில் காளீஸ்வரி தனது சக வகுப்பு தோழிகளுடன் பள்ளி நேரத்தில் வங்கி கணக்கு ஓப்பன் செய்ய சென்றுவிட்டு காலதாமதமாக பள்ளிக்கு வந்ததாக கூறப்படுகிறது.

மாணவிகள் வகுப்பிற்கு காலதாமதமாக வந்ததால் அறிவியல் ஆசிரியை ஜலீலா மாணவிகளை அவதூறாக பேசியுள்ளார். அறிவியல் ஆசிரியையுடன் இணைத்துக்கொண்டு ஆங்கில ஆசிரியர் ஜெரோன் என்பவரும் மாணவிகளை ஆபாசமாக பேசியுள்ளார்.

மேலும், நீங்கள் மாடு மேய்க்க கூட தகுதி இல்லை என்றும் திட்டியுள்ளன்னர். இதனால் மனமுடைந்த மாணவி காளீஸ்வரி வீட்டிற்கு சென்று எலி மருந்தை சாப்பிட்டுவிட்டு படுக்க சென்றுள்ளார். படுக்க சென்ற மாணவி அழுதுகொண்டே இருந்ததால் சந்தேகமடைந்த பெற்றோர் மாணவியிடம் விசாரித்ததில் பள்ளியில் நடந்ததையும், எலி மருந்து சாப்பிடத்தையும் கூறியுள்ளார்.

உடனே மாணவியை பெற்றோர் மருத்துவமனையில் அனுமதித்துள்னனர். அதன்பின்னர் உறவினர்களுடன் பள்ளியை முற்றுகையிட்டு கல்வி துறை அதிகாரிகளுடன் சேர்ந்து விசாரித்ததில் ஆசிரியர்கள் அவதூறாக பேசியது தெரியவந்தது.

சம்மந்தப்பட்ட ஆசிரியர்கள் இருவரும் பணியிடம் மாற்றம் செய்யப்படுவார்கள் என அதிகாரிகள் உறுதி அளித்ததை அடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்துசென்றனர்.


Advertisement