தமிழகம் இந்தியா

#வீடியோ: கடவுள் முருகனுக்கு மூன்றாவது கல்யாணம்?? பள்ளி மாணவனின் விசித்திர வேண்டுதல்.. வைரல் வீடியோ..

Summary:

#வீடியோ: முருகா.. என்னை அடித்த சாருக்கு கொரோனா வந்திடனும்! அப்படி வந்த உனக்கு மூன்றாவது மனைவி... பள்ளி சிறுவனின் வயிறு குழுங்க சிரிக்க வைக்கும் காமெடி காட்சி இதோ

சிறுவன் ஒருவன் தன்னை அடித்த வாத்தியாருக்கு கொரோனா வரவேண்டும் என்றும் அவ்வாறு நடந்தால், முருகனுக்கு மூன்றாவது ஒரு மனைவியை கட்டிவைப்பதாக சிறுவன் ஒருவன் வேண்டியுள்ள வீடியோ  காட்சி தற்போது இணையத்தில் பெரிய அளவில் வைரலாகி வருகின்றது.

கடவுளிடம் மக்கள் பணம், நகை, படிப்பு என பல பல வேண்டுதல்களை குவிக்கின்றனர். இங்கு பள்ளி மாணவர் ஒருவர் தன்னை அடித்த வாத்தியாருக்கு தண்டனையாக கொரோனா வர வேண்டும் என்றும், அவ்வாறு நடந்துவிட்டால் உனக்கு மூன்றாவதாக மனைவியை கட்டி வைக்கிறேன் என்று முருக கடவுளிடம் வணங்கியுள்ள சம்பவம் அனைவரையும் சிரிக்க வைத்துள்ளது.

மேலும் அந்த ஸ்கூல்ல ஒன்னு நான் இருக்கணும் இல்லன்னா அந்த சார் இருக்கணும் முருகா என்று புலம்பியுள்ளான். தற்போது அந்த வீடியோ வைரலாகி அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. இதோ  அந்த  வீடியோ காட்சி..


Advertisement