அதிசய பிறவி ! பள்ளி மாணவனுக்கு மூன்றாவது கண்! ஷாக் ஆன ஆசிரியர்கள்!

அதிசய பிறவி ! பள்ளி மாணவனுக்கு மூன்றாவது கண்! ஷாக் ஆன ஆசிரியர்கள்!



school student closed his eyes and telling everything


கரூர் மாவட்ட குளித்தலையை அடுத்த கிருஷ்ணரைாயபுரம் அருகே உள்ள கோவக்குளம் கிராமத்தை சேர்ந்த ஜெயபால் என்பவர் விவசாயம் செய்து வந்துள்ளார். இவரது மகன் தண்டாபணி பழைய ஜெயங்கொண்ட சோழபுரத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்துள்ளான்.

இவர் கண்களை துணியால் கட்டி கொண்டு சுற்றி நடப்பதை அறிந்து கொள்ளும் பயிற்சி பெற்றிருக்கிறார். இந்த பயிற்சி மூலம் தனக்கு 3வது கண் இருப்பதை அறிந்து கொண்டுள்ளான் தண்டாபணி.  இதுகுறித்து தண்டாபணி தன் பள்ளி ஆசிரியர்களிடம் இதை பற்றி கூறியபோது அவர்கள் அனைவரும் அதிசயமாகவும், ஆச்சரியமாகவும் பார்த்துள்ளனர்.

school student

இந்தநிலையில் நேற்று காலை பள்ளி வளாகத்தில் மாணவ-மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் முன்னிலையில் தண்டபாணியின் கண்களை ஒரு துணியில் கட்டிவிட்டு ஆசிரியர்கள் கைவிரலை காட்டி இது எத்தனை என்று கேட்டபோது சரியாக பதில் கூறினார். மேலும் ரூபாய் நோட்டுகளின் மதிப்பு, அந்த நோட்டின் வரிசை எண்கள் போன்றவை குறித்த விவரங்களை அவர் சரியாக கூறினார். இதனைப்பார்த்த பள்ளி ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் ஆச்சரியம் அடைந்தனர்.

இதுகுறித்து மாணவர் தண்டபாணி கூறுகையில், நான் இந்த பயிற்சியை 2 மாதத்தில் கற்று கொண்டேன். இந்த பயிற்சிக்கு பிறகு என்னை சுற்றி நிற்பவர்களை பற்றி துல்லியமாக சொல்லமுடியும். படிப்பில் பின்தங்கிய நான், தற்போது முதல் மாணவனாக பயின்று வருகிறேன். அரசு அனுமதித்தால் நான் கண்ணை கட்டிக்கொண்டு தேர்வு எழுத தயாராக உள்ளேன் என கூறியுள்ளான். மாணவன் தண்டபாணிக்கு மூன்றாவது கண்ணான நெற்றிக்கண் உள்ளது என அனைவரும் பாராட்டி வருகின்றனர்.