நீண்ட நாட்களுக்கு பிறகு பள்ளிகள், கல்லூரிகள் இன்று திறப்பு.! முன்னேற்பாடுகளுடன் தாயார் நிலையில் இருக்கும் வகுப்பறைகள்.!

நீண்ட நாட்களுக்கு பிறகு பள்ளிகள், கல்லூரிகள் இன்று திறப்பு.! முன்னேற்பாடுகளுடன் தாயார் நிலையில் இருக்கும் வகுப்பறைகள்.!


school open in tamilnadu

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருவதால் அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதலே மூடப்பட்டது. தமிழ் நாட்டில் பள்ளிகள் நீண்ட நாட்களாக திறக்கப்படாமல் இருந்து வந்ததால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புக்கள் நடத்தப்பட்டு வந்தது. கொரோனாவால் 2020 -2021 கல்வியாண்டில் 1ஆம் வகுப்பு முதல் 11ஆம் வகுப்பு வரை அனைவருமே தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டனர். 

கொரோனா 2-வது அலை தீவிரம் காரணமாக, 12-ம் வகுப்பு பொது தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன. 10 மற்றும் 11-ம் வகுப்புகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கப்பட்டது. மாணவர்கள் கடந்த ஒரு வருடமாக பள்ளிக்கு செல்லாத காரணத்தால் பெற்றோர்கள் அவர்ளுடைய எதிர்காலம் குறித்த பயத்தில் இருந்துவந்தனர்.

தற்போது நோய் பரவல் சற்று குறைந்ததை தொடர்ந்து பள்ளிகள், கல்லூரிகளை மீண்டும் திறப்பது குறித்து அரசு தீவிரமாக பரிசீலித்து வந்தது. நீண்ட ஆலோசனைக்கு பிறகு ஊரடங்கு தளர்வில் பள்ளிகள், கல்லூரிகள் திறப்பது குறித்த அறிவிப்பு வெளியானது. அந்த அறிவிப்பின் படி, பள்ளிகள், கல்லூரிகள் இன்று (புதன்கிழமை) முதல் மீண்டும் திறக்கப்பட உள்ளன. 

பள்ளிகளில் 9, 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. கல்லூரிகளை பொறுத்தவரையில் முதலாம் ஆண்டு மாணவர்களை தவிர பிற மாணவர்களுக்கு சுழற்சி முறையிலும், அதில் இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் அனைத்து நாட்களிலும் வகுப்புகள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

school

பள்ளிகள், கல்லூரிகள் வகுப்பறையில் 50 சதவீத மாணவர்களுடன், வாரத்தில் 6 நாட்கள் வகுப்புகள் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், கல்வி நிலைய வளாகங்கள் அனைத்தும் தூய்மையாக வைத்திருக்கவும், கிருமிநாசினி திரவம் கொண்டு சுத்தம் செய்யவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இந்தநிலையில் தமிழகத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் நேற்று முழுவதும் சுத்தம் செய்யப்பட்டது.

வகுப்பறைக்கு வரும் மாணவர்களின் உடல் வெப்பநிலை பரிசோதித்த பிறகே, உள்ளே செல்ல அனுமதிக்கப்படுவார்கள். அதற்கேற்ற வகையில் முன்னேற்பாடுகள் அனைத்தும் கல்வித்துறை சார்பில் செய்யப்பட்டு உள்ளது. ஆசிரியர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்றும், அவ்வாறு தடுப்பூசி போட்ட ஆசிரியர்கள் மட்டும் பள்ளிக்கு வர உத்தரவிடப்பட்டுள்ளது.