தமிழகம்

கனமழை காரணமாக நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறையை அறிவித்த மாவட்ட ஆட்சியர்கள்!

Summary:

school leave for heavy rain


கடந்த ஒருவரமாக மேற்குதொடர்ச்சி மலைப்பகுதிகள் மற்றும் நீர்பிடிப்பு பகுதிகளில் அதிகமான கனமழை பெய்து வந்தது. இதனால் நொய்யல் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இந்தநிலையில், கோவை மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக, கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் நாளை வெள்ளிக்கிழமை விடுமுறையை அறிவித்தார் கோவை மாவட்ட ஆட்சியர்.

கோவை மாவட்டத்தில் தற்போது தென் மேற்கு பருவமழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டம் முழுவதும் பலத்த மழை பெய்கிறது. இந்நிலையில், கனமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை விடப்படுகிறது.

அதேபோல் நீலகிரி மாவட்டத்திலும் கனமழை பெய்து வருவதால், நாளை அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை விடப்படுவதாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும், கனமழை காரணமாக பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் எனவும், தாழ்வான பகுதிகளிலுள்ள மக்களை பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றி வருவதாகவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.


Advertisement