கொளுத்தும் அக்கினி வெயில்.! பள்ளி மாணவர்களுக்காக அமைச்சர் அன்பில் மகேஷ் எடுத்துள்ள அதிரடி முடிவு.!

கொளுத்தும் அக்கினி வெயில்.! பள்ளி மாணவர்களுக்காக அமைச்சர் அன்பில் மகேஷ் எடுத்துள்ள அதிரடி முடிவு.!


school-holidays-announcement-due-to-summer

இந்தியாவில் தற்போது கடுமையான கோடைக்காலம் நிலவி வருகிறது. இந்த நிலையில் தற்போது நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் பெருமளவில் அதிகரித்து வருகிறது. மேலும் கொளுத்தும் வெயிலை தாங்கிக் கொள்ள முடியாமல் சிறுவர்கள் முதல் அனைவரும் பெருமளவில் அவதிப்பட்டு வருகின்றனர்.

கடந்த 122 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வெயிலின் தாக்கம் இந்தியாவில் இந்த ஆண்டு மிகவும் அதிகமாக இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் பள்ளிக் குழந்தைகள் வெயிலால் பெருமளவில் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கும், பொதுத்தேர்வு இல்லாத மாணவர்களுக்கும் முன்கூட்டியே விடுமுறை அறிவிக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தது.

இந்த நிலையில் இதுகுறித்து 
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது, 
வெயிலின் தாக்கம் பெருமளவில் அதிகரித்துள்ளதால் பள்ளிகளுக்கு முன்கூட்டியே விடுமுறை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக முதலமைச்சருடன் ஆலோசனை செய்த பிறகு, மாணவர்களுக்கு சாதகமாக விடுமுறை குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிவித்துள்ளார்.