தமிழகம்

பள்ளி வகுப்பறையிலையே பிளஸ் ஒன் மாணவி செய்த காரியம்! நேரில் பார்த்து அதிர்ச்சியான சக மாணவிகள்.

Summary:

School girl suicide in class room at madurai

மதுரை மாவட்டம் கே. புதூர் என்னும் பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 11 ஆம் வகுப்பு மாணவி பள்ளி அறையிலையே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. குறிப்பிட்ட மாணவி மற்ற மாணவர்கள் பள்ளிக்கு வருவதற்கு முன்பு வேகமாக பள்ளிக்கு வந்துள்ளார்.

பள்ளிக்கு வரும்போதே தனது தாயின் சேலை ஒன்றையும் அவர் எடுத்து வந்துள்ளார். இந்நிலையில் தனது வகுப்பிற்குள் சென்று கதவை மூடிய மாணவி சேலையையை கட்டி அதில் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார். மற்ற மாணவ, மாணவிகள் பள்ளிக்கு வந்ததும் வகுப்பறையை திறக்க முற்பட்டுள்ளனர்.

ஆனால், கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்த நிலையில் ஜன்னல் வழியாக பார்த்தபோது மாணவி தூக்கில் சடலமாக தொங்கியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சக மாணவர்கள் பள்ளி நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளனர். பின்னர் மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சம்பவ இடத்திற்கு வந்து பள்ளி நிர்வாகத்திடம் சண்டை போட்டுள்னனர்.

மாணவி ஏன் தற்கொலை செய்துகொண்டார்? அதற்கான காரணம் என்ன என்பது பற்றி போலீசார் தீவிரமாக விசாரித்துவருகின்றனர். இதில், கடந்த ஒருவாரமாக பள்ளிக்கு வராமல் அந்த மாணவி இன்றுதான் பள்ளிக்கு வந்ததாக ஆசிரியர்கள் தெரிவித்துள்னனர்.


Advertisement