"அழக்கூட விடமாற்றங்க" - பெண்களுக்கு வில்லனாக மாறிய முத்துக்குமரன்.. களேபரமாகும் பிக் பாஸ் வீடு.!
அட பாவி மனுஷா... கடவுளுக்கு ஒருபடி மேலதானயா உங்கள சொல்லுவாங்க...! இப்டி பண்ணிட்டியே.! கதறி அழும் பெற்றோர்.!
நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் மத்திய, மாநில அரசுகள் அதனை தடுக்க பல்வேறு சட்டங்களை இயற்றியும், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனைகளையும் வழங்கி வருகிறது. ஆனாலும், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை நாள்தோறும் நடந்து வருகிறது. குறிப்பாக பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை என்ற செய்தியை கேட்டு பெற்றோர்கள் மனவேதனை அடைகின்றனர்.
இந்தநிலையில் கோவை மாவட்டம் ஆர்எஸ் புரம் பகுதியில் உள்ள சின்மயா வித்யாலயா பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்துவந்த 17 வயது மாணவி ஒருவர் ஆசிரியர் கொடுத்த பாலியல் தொல்லை காரணமாக தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அந்த மாணவி நேற்று அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் உள் பக்கமாக கதவை தாழ்ப்பாள் போட்டு கொண்டு மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து வீட்டிற்கு வந்த குடும்பத்தினர் பார்த்து பேரதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். அப்போது தற்கொலைக்கு முன்பு அந்த மாணவி எழுதிய கடிதம் ஒன்று சிக்கியுள்ளது.
அந்த கடிதத்தில், ஆசிரியர் உள்ளிட்ட சிலரின் பெயரை எழுதிவைத்துவிட்டு, இவர்கள் யாரையும் சும்மா விடக்கூடாது என எழுதியுள்ளார். இது தொடர்பாக போலீசார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆன்லைன் வகுப்பில் அந்த மாணவியிடம் இயற்பியல் ஆசிரியர் மிதுன்சக்கரவர்த்தி என்பவர் ஆபாசமாக பேசியதாக தெரிகிறது. பின்னர் நேரடி வகுப்பு தொடங்கியதும், ஆசிரியரின் பாலியல் தொல்லை அதிகரித்துள்ளது.
இதுதொடர்பாக அந்த மாணவி, தனது ஆண் நண்பரிடம் கூறி அழுதுள்ளார். மேலும் பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளார். ஆனால் பள்ளி நிர்வாகம் மாணவியை சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனர். அந்த ஆசிரியர் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிகிறது.
இந்த நிலையில் மாணவி, பெற்றோரிடம் தனக்கு பள்ளி பிடிக்க வில்லை என்று கூறி அந்த பள்ளியில் இருந்து மாற்று சான்றிதழ் வாங்கினார். தொடர்ந்து அந்த மாணவி அதே பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளியில் சேர்ந்து 12 ஆம் வகுப்பு படிப்பை தொடர்ந்தார். ஆனாலும், ஆசிரியர் மிதுன்சக்ரவர்த்தியின் பாலியல் தொந்தரவு தொடர்ந்தது. இதனால் மனவேதனையடைந்த பள்ளி மாணவி வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இதையடுத்து மிதுன் சக்கரவர்த்தி மீது போலீசார் தற்கொலைக்கு தூண்டுதல், போக்சோ உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த மிதுன்சக்கரவர்த்தியை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.