படிப்பின் மீது ஆர்வம்.! டியூசனுக்கு சைக்கிளில் சென்ற மாணவி.! கண்ணிமைக்கும் நொடியில் நடந்த துயரம்.!school-girl-died-in-accident


சென்னை செங்குன்றம் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் என்பவரின் 16 வயது மகள் ஷாலினி  ஒரு தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு அப்பகுதியில் உள்ள டியூஷன் சென்டருக்கு சைக்கிளில் சென்றுள்ளார். பின்னர் டியூசன் முடிந்ததும் சைக்கிளில் வீட்டிற்கு சென்றுள்ளார்.

சிறுமி ஷாலினி, செங்குன்றம் திருவள்ளூர் கூட்ரோடு அருகே சைக்கிளை ஒட்டிக்கொண்டு வந்தபோது, செங்குன்றத்தை நோக்கி வந்த வேன் ஒன்று சைக்கிள் மீது தாறுமாறாக வந்து மோதியது. இதில் அடித்து தூக்கி வீசப்பட்ட சிறுமி பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

accidentஇந்த விபத்து நடந்த அடுத்த நொடியே வேன் ஓட்டுநர் தலைமறைவானார். இந்த விபத்து குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைத்த போலீசார் சிறுமி ஷாலினி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விபத்துக்கு காரணமான தப்பி ஓடிய வேன் டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.