தமிழகம்

இளம்பெண்ணிற்கு பத்து நாட்களில் திருமணம்! பள்ளி நண்பன் வீட்டிற்குள் புகுந்து செய்த கொடூரச்செயல்!

Summary:

School friend murdered young girl

தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த இளம்பெண் திவ்யா என்பவர் வங்கியில் பணிபுரிந்து வந்ததுள்ளார். இந்தநிலையில் திவ்யாவிற்கும் அதே பகுதியைச் சேர்ந்த இளைஞருக்கும் திருமணம் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தன. இந்தநிலையில் இருவருக்கும் அடுத்த வாரம் திருமணம் நடத்த முடிவு செய்தனர்.

இந்நிலையில் வெங்கடேஷ் என்பவர் திடீரென திவ்யாவின் வீட்டுக்குள் நுழைந்து அவரைக் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார். உயிரிழந்த கிடந்த திவ்யாவின் உடலை பார்த்த குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விசாரணை  மேற்கொண்டனர்., விசாரணையில் கொலைசெய்தவர் திவ்யாவுடன் பள்ளியில் படித்த அவரது நண்பர் என தெரியவந்தது.

இதனையடுத்து திவ்யாவை கொலை செய்துவிட்டு தலைமறைவான அவரது நண்பர் வெங்கடேஷை போலீசார் தேடி வருகின்றனர். போலீசார் வெங்கடேஷின் பெற்றோரிடம் விசாரணை நடத்தியதில், வெங்கடேசனும் திவ்யாவும் காதலித்ததாகவும் சில தினங்களுக்கு முன்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டதாகவும் தெரிவித்தனர்.

ஆனால் அவர்களுக்கு நடந்த திருமணத்திற்கு எந்த ஆதாரமும் இல்லை என வெங்கடேஷின் பெற்றோர் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து கொலை செய்த வெங்கடேஷை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.


Advertisement