தமிழகம்

இளம் மாணவியின் தாயாரின் செல்போனுக்கு வந்து குவிந்த ஆபாச வீடியோக்கள்..! ஆபாச அழைப்புகள்..! விசாரித்தபோது காத்திருந்த அதிர்ச்சி.!

Summary:

School boy morphed girl student mother photo for love issue

தனது  காதலை ஏற்க மறுத்த பள்ளி மாணவியை பழிவாங்குவதற்காக மாணவியின் தாயாரின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளங்களில் பதிவிட்ட 17 வயது பள்ளி மாணவரை போலீசார் கைது செய்துள்ளனர். 

சென்னை அசோக் நகர் பகுதியில் வசித்து வரும் 40 வயதாகும் பெண் தொழிலதிபர் ஒருவரின் வாட்ஸ்அப் எண்ணிற்கு  கடந்த சில நாட்களாக ஆபாச புகைப்படம், வீடியோ மற்றும் ஆபாச தொலைபேசி அழைப்புகள் வந்தவண்ணம் இருந்துள்ளது.

இதனால் அதிர்ச்சியான அந்த பெண் இது குறித்து விசாரித்த போது அவரது பெயரில் போலியான இன்ஸ்டகிராம் கணக்கு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துளளர். மேலும் அந்த போலியான இன்ஸ்டாகிராம் கணக்கில் அவரது ஆபாசமான புகைப்படங்கள் மற்றும் அவரது தொலைபேசி எண்ணை பதிவிட்டு ஆபாசமாக பேசுவதற்கு இந்த எண்ணை அழைக்கவும் என பதிவிட்டிருப்பதைக் கண்டு மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளார். 

உடனே இது குறித்து காவல்நிலையத்தில் புகார் கொடுத்ததை அடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் இன்ஸ்டாகிராமில் பதிவு செய்யப்பட்ட புகைப்படங்களின் ஐபி முகவரியை ஆதாரமாகக் கொண்டு குற்றவாளியை தேட ஆரம்பித்தனர். 

இந்த சம்பவம் குறித்து நடந்த விசாரணையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது சென்னை ஆயிரம் விளக்கு பகுதியை சேர்ந்த 17 வயதான பள்ளி மாணவன் என்பதை போலீசார் கண்டுபிடித்தனர். 

மாணவனை கைது செய்து போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது புகார் கொடுத்த பெண் தொழிலதிபரின் மகளும், அந்த மாணவரும் ஒரே பள்ளியில் படித்து வந்ததும் இருவரும் நட்பாக பழகிய போது மாணவன் அந்தப் பெண்ணை ஒருதலையாக காதலித்ததாகவும் தெரிகிறது 

மாணவனின் காதல் விவகாரம் அந்த மாணவிக்கு தெரியவந்ததை அடுத்து அந்த மாணவி அந்த மாணவனுடன் பேசுவதை நிறுத்தியுள்ளார். மாணவி தன்னுடன் பேசாமல் இருப்பதற்கு அவரது தாயார் தான் காரணம் என நினைத்த அந்த மாணவன் மாணவியின் தாயார் பழி வாங்குவதற்காக அவரது புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து அந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனை அடுத்து மாணவன் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் மாணவனை அரசு கூர்நோக்கு பள்ளிக்கு அனுப்பி வைத்துள்ளனர். மாணவி தனது காதலை ஏற்க மறுத்ததால் அவரது தாயாரை பழிவாங்குவதற்காக மாணவன் செய்த இந்தக் காரியம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement