சசிகலா எப்போது டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார்.? எப்போது தமிழகம் வருகிறார்.?sasikala when will release

சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்ற சசிகலா, கடந்த 27ஆம் தேதி விடுதலை ஆனார். ஆனால் அவருக்கு ஏற்பட்ட உடல்நிலை கோளாறு காரணமாக தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சசிகலாவின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக விக்டோரியா அரசு மருத்துவமனை தெரிவித்துள்ளது.

சசிகலாவுக்கு இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் அவருக்கு சர்க்கரை பிரச்சினையும் கட்டுக்குள் வராமல் இருந்தது. இந்த நிலையில் அவரது ரத்த அழுத்தம், சர்க்கரை போன்ற அனைத்து பிரச்சினைகளும் கட்டுக்குள் வந்துள்ளன. தற்போது அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்றும், இருந்தபோதிலும் கொரோனா வழிகாட்டுதலின்படி அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

sasikala

இதுகுறித்து விக்டோரியா அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரி முதல்வர் கூறுகையில், சசிகலாவின் உடல்நிலை சீராக உள்ளது. கர்நாடக சுகாதாரத்துறையின் வழிகாட்டுதல்படி, 10 நாட்கள் ஆனாலே கொரோனா பாதிப்புகள் இல்லை என்றால் நோயாளியை விடுவிக்க முடியும். கொரோனா பரிசோதனை செய்ய வேண்டிய அவசியம் இல்லை. சசிகலா டிஸ்சார்ஜ் ஆவது குறித்து மருத்துவர்களுடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இந்தநிலையில், வருகிற 5-ஆம் திகதி தமிழகத்திற்கு செல்வார் என்றும் தகவல் வெளியாகியுள்ளன.