அரசியல் தமிழகம்

சசிகலா எப்போது சிறையில் இருந்து வெளியே வருகிறார்? சிறைத்துறை வெளியிட்ட தகவல்!

Summary:

sasikala when released from jaill

சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் தலா 10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது. அவர்கள் 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இருந்து பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்துவருகிறார்கள். 

இந்தநிலையில், சசிகலாவின் தண்டனை காலம் முடிய இன்னும் 8 மாதங்கள் மட்டுமே உள்ளன. இந்நிலையில் சசிகலாவின் விடுதலை குறித்து பெங்களூருவைச் சேர்ந்த நரசிம்ம மூர்த்தி என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்குப் பதிலளித்துள்ள கர்நாடக சிறைத்துறை, குற்றவாளிகளின் விடுதலை பல்வேறு விதிகளுக்கு உட்பட்டது எனத் தெரிவித்துள்ளது. அதில், அபராதத் தொகை செலுத்தப்படுவதன் அடிப்படையில் விடுதலைத் தேதி மாற்றப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

ஆனாலும் சசிகலாவின் ஆதரவாளர்கள் சசிகலா எப்போது சிறையில் இருந்து வெளியே வருவார்கள், அவர் வந்தவுடன் அரசியலில் எதாவது மாற்றம் ஏற்படுமா என ஆவலுடன் காத்திருக்கின்றனர்.


Advertisement