சசிகலா மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட அடுத்த நொடியே அரசியல் ஆட்டம் ஆரம்பம்.!

சசிகலா மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட அடுத்த நொடியே அரசியல் ஆட்டம் ஆரம்பம்.!


sasikala used admk flag

சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்ற சசிகலா, ஜனவரி 27ஆம் தேதி விடுதலை ஆனார். ஆனால் அவருக்கு ஏற்பட்ட கொரோனா தொற்று மற்றும் உடல்நிலை கோளாறு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சசிகலா, கொரோனா பாதிப்பில் இருந்து முழுமையாக குணமடைந்துள்ளார். 

இந்தநிலையில் நேற்று சசிகலா மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு ஒருவாரம்தனிமைப் படுத்திக்கொள்ள வேண்டும் என்ற மருத்துவர்களின் அறிவுரையின்படி, பெங்களூருவிலேயே ஒரு வீட்டில் ஒரு வாரம் தங்கி ஓய்வெடுக்க உள்ளார். 

sasikala

சசிகலா டிஸ்சார்ஜ் செய்யப்படுவதையடுத்து மருத்துவமனைக்கு டிடிவி தினகரன் சென்றார். சசிகலாவை அழைத்து செல்ல தனியாக கார் தயார் செய்யப்பட்டிருந்தது. அந்த காரின் முகப்பில் அ.தி.மு.க கொடி கட்டப்பட்டிருந்தது. சசிகலா அவர்கள் அதிமுக கொடி கட்டப்பட்ட காரில் சென்றது, தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

விடுதலைக்குப் பின் அ.தி.மு.க வை மீட்டெடுப்பதே சசிகலாவின் முதல் பணியாக இருக்கும் என அவருக்கு நெருக்கமான சிலர் தெரிவித்து வரும் நிலையில் காரில் அ.தி.மு.க கொடி கட்டப்பட்டுள்ளது, அவற்றை உறுதி படுத்தும் விதமாக அமைந்துள்ளது. இந்நிலையில், அதிமுக அமைச்சர் சி.வி.சண்முகம் அதிமுக கொடியை சட்ட விரோதமாக பயன்படுத்திய சசிகலா மீது வழக்குப்பதிவு செய்யப்படும். கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள் அதிமுக கொடியை பயன்படுத்தினால், யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.