அரசியல் தமிழகம்

இன்று டிஸ்சார்ஜ் ஆகிறார் சசிகலா.! எப்போது தமிழகம் வருகிறார்.?

Summary:

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சசிகலா இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார்.

சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்ற சசிகலா, கடந்த 27ஆம் தேதி விடுதலை ஆனார். ஆனால் அவருக்கு ஏற்பட்ட கொரோனா தோற்று மற்றும் உடல்நிலை கோளாறு காரணமாக தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சசிகலாவின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக விக்டோரியா அரசு மருத்துவமனை தெரிவித்துள்ளது.

இந்தநிலையில் சசிகலா, கொரோனா பாதிப்பில் இருந்து முழுமையாக குணமடைந்துள்ளார். இந்தநிலையில் இன்று சசிகலா மருத்துவமனையில்  இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார். ஆனாலும் ஒருவாரம்தனிமைப் படுத்திக்கொள்ள வேண்டும் என்ற மருத்துவர்களின் அறிவுரையின்படி, பெங்களூருவிலேயே ஒரு வீட்டில் ஒரு வாரம் தங்கி சசிகலா ஓய்வெடுக்க உள்ளார். 

இந்தநிலையில் சசிகலா இன்று மருத்துவமனையில் இருந்து  டிஸ்சார்ஜ் ஆவதையடுத்து மருத்துவமனை வளாகத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆதரவாளர்கள் வருகையும் அதிகரித்து உள்ளதால் போலீசார் தீவிர பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து ஒருவாரத்திற்கு பிறகு சசிகலா தமிழகம் திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


Advertisement