அரசியல் ஆட்டத்தை துவங்கினார் சசிகலா.! கலக்கத்தில் பிற கட்சிகள்.! ஒன்றிணைய போகிறதா அதிமுக.?sasikala-call-to-all-admk-members

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 73-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தி.நகரில் உள்ள இல்லத்தில் ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு சசிகலா மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா, ஜெயலலிதாவின் உண்மையான உடன்பிறப்புகள் ஒன்றாக இணைந்து சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளவேண்டும். சட்டமன்ற தேர்தலில் வெற்றிப்பெற நான் உங்களுக்கு துணையாக இருப்பேன். ஜெயலலிதாவின் உடன்பிறப்புகள் மீண்டும் ஒன்றிணைந்து தேர்தலில் வெற்றி பெற பாடுபட வேண்டும். விரைவில் தொண்டர்கள், மக்களை சந்திக்க உள்ளேன் என கூறியுள்ளார்.

sasikala

சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து கடந்த மாதம் விடுதலையாகி சென்னை வந்த சசிகலா இதுவரை சைலண்டாக இருந்தார். இன்று மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 73-வது பிறந்தநாளை முன்னிட்டு முதன்முறையாக அரசியில் ஆட்டத்தை துவங்கியுள்ளார். இதுவரை அதிமுக இரண்டு அணிகளாக இந்தநிலையில், தற்போது ஜெயலலிதாவின் உண்மையான உடன்பிறப்புகள் ஒன்றாக இணைந்து சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளவேண்டும் என சசிகலா வேண்டுகோள் விடுத்துள்ளார். 

அதிமுக இரண்டு அணிகளாக இருந்தால் நமக்கு வரும் தேர்தலில் நல்ல வாய்ப்பு என காத்திருந்த பிற கட்சிகளுக்கு, சசிகலாவின் பேட்டி பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.