வரும் தேர்தலில் ஓட்டுக்கு காசு கொடுத்தால் இதை செய்யுங்கள்.! தெறிக்கவிட்ட சரத்குமார்.!

வரும் தேர்தலில் ஓட்டுக்கு காசு கொடுத்தால் இதை செய்யுங்கள்.! தெறிக்கவிட்ட சரத்குமார்.!


sarathkumar talk about comming election

தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளநிலையில் பல்வேறு அரசியல் கட்சிகளும் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. வரும் சட்டமன்ற தேர்தல் தமிழகத்தில் முக்கிய தலைவர்களாக இருந்த ஜெயலலிதா மற்றும் கருணாநிதி இல்லாமல் முதல்முறையாக திமுகவும், அதிமுகவும் போட்டியிடுகிறது. 

இதனால் தமிழகத்தில் அரசியல் களம் சூடுபிடிக்க துவங்கியுள்ளது. இந்தநிலையில், சேலம் மாவட்டம் வாழப்பாடியில் நடந்த கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் தேர்தல் நேரத்தில் பணம் வாங்கினால் ஜனநாயகத்தைப் பார்க்கவே முடியாது என தெரிவித்துள்ளார்.

sarathkumar

சரத்குமார் பேசுகையில், 2021 தேர்தல் வந்து விட்டது, ஒரு ஓட்டுக்கு எவ்வளவு கொடுக்கலாம்? ஆயிரம் கொடுக்கலாமா, இரண்டாயிரம் கொடுக்கலாமா என்று எல்லாரும் பேசிக்கொண்டிருப்பார்கள். அவர்கள் வந்து பணத்தைக் கொடுத்தால் அவர்கள் முகத்தில் விசிறியடியுங்கள். ஓட்டுக்கு எப்போது கைநீட்டி பணம் வாங்குகிறோமோ அதை விட கேவலமானது எதுவும் கிடையாது என தெறிவித்துள்ளார் சரத்குமார்.