புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
பெண்ணை நிர்வாணப்படுத்தி, கை-கால்களை கட்டி தோட்டப்பகுதியில்., சேலத்தில் பேரதிர்ச்சி சம்பவம்.. பதறவைக்கும் துயரம்.!
நிலப்பிரச்சனையில் பெண்ணை அடித்து கொலை செய்து, ஆடைகளை களைந்து நிர்வாணப்படுத்தி கிணற்றில் உடலை வீசி சென்ற பயங்கரம் நடந்துள்ளது. கொலை வழக்கில் இருந்து தப்பிக்க பலாத்காரம் போல பெண்ணின் ஆடையை சித்தரித்த பயங்கரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள வீரகனூர், பகடப்பாடி மேட்டுத்தெருவில் வசித்து வருபவர் அசோகன் (வயது 43). இவருக்கு விஜயா (வைத்து 37), செல்வராணி (வயது 35) என இரண்டு மனைவிகள் உள்ளார்கள். முதல் மனைவி விஜயாவிற்கு குழந்தை பிறக்காத காரணத்தால், கடந்த 16 வருடத்திற்கு முன்னதாகவே செல்வராணியை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டுள்ளார்.
செல்வராணிக்கும் - அசோகனிற்கும் 15 வயதுடைய மகன் இருக்கிறார். கடந்த மார்ச் 31 ஆம் தேதியன்று அசோகன் - செல்வராணி இடையே தகராறு ஏற்பட்ட நிலையில், அன்றைய தினத்தின் இரயில் செல்வராணி மாயமாகினார். இந்த நிலையில், நேற்று அசோகனின் விவசாய தோட்டம் அருகேயுள்ள பாபுவின் தோட்டத்து கிணற்றில் பெண்ணின் சடலம் நிர்வாணமாக மிதக்கிறது என காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்த ஆத்தூர் காவல் கண்காணிப்பாளர் இராமச்சந்திரன், கெங்கவல்லி தீயணைப்பு படையினர் சேர்ந்து பெண்ணின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், பெண் குறித்து விசாரணை செய்கையில் செல்வராணியின் சடலத்தை அசோகன் அடையாளம் காட்டியுள்ளார்.
இதற்கிடையே, செல்வராணியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரின் அண்ணன் ஆனந்த முருகன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை ஏற்ற காவல் துறையினர் 3 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தியுள்ளனர். அதிகாரிகள் விசாரணையை துரிதப்படுத்திக்கொண்டு இருக்கும் போதே, அசோகனின் சகோதரி கணவர் சிவராஜ் வெள்ளையூர் வி.ஏ.ஓ-விடம் நேரில் சரணடைந்தார்.
அவரிடம் அதிகாரிகள் நடத்திய விசாரணையில், "எனக்கும், மைத்துனர் அசோகனுக்கு பொதுவான பூர்வீக சொத்து நிலம் இருந்தது. இந்த பூர்வீக சொத்தில் எனது மனைவி ராசாத்திக்கு நிலத்தில் சிறு பங்குகூட கொடுக்காமல், அசோகன் தனது 2 மனைவிகளுக்கும் நிலத்தினை பிரித்து எழுதிக்கொடுத்தார். இதுகுறித்து எங்களுக்குள் தகராறு இருந்து வந்தது. கடந்த 31 ஆம் தேதி காலையில் எங்களுக்குள் தகராறு ஏற்பட்டு இருந்தது.
அந்த சமயத்தில், கணவன் - மனைவி பிரச்சனையில் அசோகனிடம் சண்டையிட்டு செல்வராணி தனியே நடந்து சென்றுள்ளார். இதனை கவனித்த நான் அவரை இடைமறித்து பிரச்சனை செய்யவே, அவர் என்னை தரக்குறைவாக பேசினார். இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் கட்டையை அடுத்து மண்டையை அடித்து உடைத்தேன்.
அவர் பேச்சு மூச்சின்றி விழவே, அவரின் ஆடைகளை களைந்து, கை-கால்களை கயிற்றால் கட்டி களைகட்டி சரவணனின் விவசாய தோட்டத்தில் இறக்கினேன். காவல் துறையினர் விசாரணையை துரிதப்படுத்தியதால், வி.ஏ.ஓ முன்னிலையில் சரணடைந்தேன். பலாத்காரமா செய்து கொலை நடந்தது போல இருக்க வேண்டும் என்பதற்காக உடலை நிர்வாணப்படுத்தி கிணற்றில் வீசினேன்" என்று தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, சிவராஜின் மீது வீரகனூர் கொலை வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் நீதிமன்றத்தில் சமர்ப்பித்து சிறையில் அடைத்தனர். இந்த சமப்வம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.