தமிழகம்

மாமியார் மருமகன் நடுரோட்டில் லடாய்.. மண்டை உடைப்பு, கத்திக்குத்து..!

Summary:

மாமியார் மருமகன் நடுரோட்டில் லடாய்.. மண்டை உடைப்பு, கத்திக்குத்து..!

சேலம் மாவட்டத்தில் உள்ள கொண்டலாம்பட்டி கிழக்கு காட்டுவளவு பகுதியைச் சேர்ந்தவர் பச்சையம்மாள் (வயது 40). இவரது கணவர் சரவணன். சரவணன் கடந்த 10 வருடங்களுக்கு முன்னர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில், பச்சையம்மாள் சிவகுமார் என்பவரை இரண்டாவதாக மணம்முடித்து வசித்து வந்துள்ளார். 

பச்சையம்மாலுக்கும் -  சரவணனுக்கும் பிரியதர்ஷினி என்ற மகளும் இருந்த நிலையில், அவருக்கு கலைச்செல்வன் என்பவருடன் திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. 

தம்பதிகள் இருவரும் நன்றாக வசித்து வந்த நிலையில், கடந்த சில மாதங்களாகவே குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிய வருகிறது. இதனால் அவ்வப்போது இருவரும் சண்டையிடுவது வழக்கமாகியுள்ளது.  

இந்நிலையில், நேற்று முன்தினம் அதேபோல தம்பதியர் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகவலை பிரியதர்ஷினி தனது தாயாரிடம் தெரிவித்துள்ளார். 

இதனையடுத்து, நேற்று இரவு 10 மணி அளவில் மகளின் வீட்டிற்கு வந்த பச்சையம்மாள், மருமகனிடம் வாக்குவாதம் செய்துள்ளார். அப்போது, மருமகன் கலைச்செல்வன், "உன்னை போல உனது மகளின் வாழ்க்கையை சீரழித்து விடாதே" என்று கூறியதாக தெரிய வருகிறது. 

இதனால் ஆத்திரமடைந்த பச்சையம்மாள் அருகே இருந்த இரும்பு பைப்பை எடுத்து கலைச்செல்வனின் தலையில் அடித்துள்ளார். தலையிலிருந்து ரத்தம் வழிந்தோடிய நிலையிலும், ஆத்திரமடைந்த கலைச்செல்வன் மாமியாரை கழுத்தில் கத்தியால் குத்தியுள்ளார். இருவரும் படுகாயமடைந்த நிலையில், அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு இருவரையும் சிகிச்சைக்காக மருத்துவனையில் அனுமதி செய்தனர்.


Advertisement