காதலியை பார்க்க ஆசையாக சென்ற போது விபத்தில் மரணம்.. காதலியின் முடிவால் கதறும் குடும்பம்.!

காதலியை பார்க்க ஆசையாக சென்ற போது விபத்தில் மரணம்.. காதலியின் முடிவால் கதறும் குடும்பம்.!


salem-men-died-and-also-his-lover-suicide-in-dharmapuri

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மோளையானூர் பகுதியைச் சேர்ந்த அகல் பிரியா எனும் 20 வயது பெண் கோவையில் இருக்கும் தனியார் மருந்து கடை ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு கட்டரசன் பட்டி பகுதியைச் சேர்ந்த ஸ்டாலின் என்பவரிடம் காதல் ஏற்பட்டுள்ளது. தீபாவளியை கொண்டாட அகல் பிரியா சொந்த ஊருக்கு வந்துள்ளார். 

Salem

அதன் பின் கடந்த 14ஆம் தேதி கோவைக்கு சென்ற அவர் ஸ்டாலினுக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு சேலம் பேருந்து நிலையத்திற்கு வரச் சொல்லி அழைத்துள்ளார். காதலியை பார்க்க ஸ்டாலின் சென்றபோது அயோத்தியாபட்டினம் பகுதியில் விபத்து ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்து இருக்கிறார்.

Salem

இந்த தகவலை அறிந்த அகல் பிரியா மிகுந்த துக்கத்தில் இருந்த நிலையில் மீண்டும் வீட்டிற்கு சென்று 15ஆம் தேதி தூக்க மாத்திரை மற்றும் விஷக் கொட்டையை சாப்பிட்டு மயங்கி விழுந்துள்ளார். இதை கவனித்த குடும்பத்தினர் அவரை மீட்டு பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளார்.