திருடச்சென்ற வீட்டில் உறங்கிய பெண்ணை வெறிக்க பார்த்த காமுகன்.. வீட்டுக்குள் வைத்து ஊமைக்குத்தாக குத்திவிட்ட குடும்பம்.. பரபரப்பு சம்பவம்.!

திருடச்சென்ற வீட்டில் உறங்கிய பெண்ணை வெறிக்க பார்த்த காமுகன்.. வீட்டுக்குள் வைத்து ஊமைக்குத்தாக குத்திவிட்ட குடும்பம்.. பரபரப்பு சம்பவம்.!


salem-men-arrested-by-police

திறந்து கிடந்த வீட்டில் திருட சென்ற திருடன், அந்த வீட்டிற்குள் பெண் தூங்கி இருப்பதை கண்டு ரசித்தவாறே நின்றதால், வீட்டில் உள்ளவர்கள் அவரை நொறுக்கிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சேலம் மாவட்டத்தில் உள்ள சூரமங்கலம் பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதால், இரவு நேரங்களிலும் காற்றோட்டத்திற்காக அப்பகுதி மக்கள் வீட்டின் கதவைத் திறந்துவைத்து தூங்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அதுபோல திறந்து கிடந்த ஒரு வீட்டில் நள்ளிரவில் திருடன் நுழைந்த நிலையில், அங்கு பெண் ஒருவர் தூங்கி கொண்டிருப்பதை கண்டுள்ளார். 

இரவு நேர மின் விளக்கின் வெளிச்சத்தில் அப்பெண்ணை பார்த்த திருடன், 'ஏதோ வானத்தில் இருந்து கீழே குதித்த தேவதையை பார்ப்பதுபோல' தன்னையும் மறந்து பார்த்துக் கொண்டிருந்துள்ளார். ஆனால், மின்தடையால் தூக்கம் சரியாக வராமல் அரைத்தூக்கத்தில் இருந்த அந்த பெண்ணுக்கு விழிப்பு வந்த நிலையில், கண் முன்னே ஒருவர் நிற்பதை பார்த்து கத்திக் கூச்சலிட்டு உள்ளார். 

இதனால் சத்தம் கேட்டு பெண்ணின் கணவர், மாமியார், மாமனார் ஆகியோர் அனைவரும் விழித்துப் பார்க்கையில், திருடன் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். மேலும், பெண்ணின் கூச்சலால் பயந்து போன திருடன் அங்கிருந்து தெறித்து ஓட தொடங்கிய நிலையில், அருகில் இருந்தவர்கள் அனைவரும் சேர்ந்து விரட்டிப் பிடித்து அவரை நொறுக்கி எடுத்தனர். 

Salem

இதனால் வலிப்பு வந்தவன் போல திடீரென கை-கால்களை இழுத்துக் கொண்டு கீழே விழுந்துள்ளார். பின் உடனடியாக வீட்டு உரிமையாளர் ஆம்புலன்ஸ் மற்றும் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்க, சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட திருடனிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர்.

விசாரணையில், இவர் வாழப்பாடியை அடுத்த நீர்முள்ளிகுட்டை பகுதியில் வசிக்கும் சின்ராசு என்பதும், அவர் மீது முன்பே 17 வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது. தொடர்ந்து மருத்துவர்கள் பரிசோதித்த நிலையில், அவருக்கு வலிப்பு எதுவும் ஏற்படவில்லை, நாடகமாடி இருக்கிறார் என்று உறுதி செய்ததை அடுத்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.