முதலிரவன்றே தலைதெரித்து ஓட்டம் பிடித்த இரண்டாவது மனைவி.. ஜோடி APP-ல் ஜோடி தேடியவருக்கு நேர்ந்த பரிதாபம்.!

முதலிரவன்றே தலைதெரித்து ஓட்டம் பிடித்த இரண்டாவது மனைவி.. ஜோடி APP-ல் ஜோடி தேடியவருக்கு நேர்ந்த பரிதாபம்.!


SALEM MAN CHEATED BY WOMAN BY MARRIAGE

முதல் மனைவி இறந்ததால் மகனுக்காக இரண்டாவது திருமணம் செய்த நபரை, முதலிரவன்றே மனைவி நகை & பணத்துடன் ஓட்டம் பிடித்த சம்பவம் நடந்துள்ளது.

சேலம் மாவட்டத்தில் உள்ள கொங்கணாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் லாரி ஓட்டுநர் செந்தில் (வயது 46). இவரின் மனைவி கடந்த 11 மாதங்களுக்கு முன்னதாக உயிரிழந்துவிட்டார். இதனால் தனது மகனுடன் வசித்து வந்துள்ளார். லாரி ஓட்டுநராக தான் பணியாற்றுவதால் அவ்வப்போது வெளியூர் செல்லவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ள நிலையில், மகனை யார் கவனிப்பார்? என்று எண்ணிய செந்தில் இரண்டாவது திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளார். 

இதற்காக ஜோடி ஆப் மூலமாக பெண் தேடவே, கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தை சேர்ந்த கவிதா என்ற பெண்மணி கணவரை இழந்த பெண்ணாக தன்னை அடையாளப்படுத்தியுள்ளார். இதன்பின் இருவரும் பேசிவந்த நிலையில், கவிதா செந்திலிடம் அவ்வப்போது செலவுக்கு பணம் கேட்டுள்ளார். அவரும் மனைவியின் மீது வைத்துள்ள பாசத்தால் அனுப்பி வைத்துள்ளார். 

இவ்வாறாக சில சமயங்களில் வீட்டு வாடகை, கந்துவட்டி கடன் நிலுவை என்று கூறி ரூ.60 ஆயிரம் வரை கவிதா பெற்றுக்கொண்ட நிலையில், ஒருகட்டத்தில் சுதாரித்த செந்தில் தன்னை திருமணம் செய்ய கூறியுள்ளார். சம்மதம் தெரிவித்து கடந்த ஜூன் 24ல் சேலம் வந்த கவிதாவை சிவன் கோவிலில் வைத்து தாலிகட்டி செந்தில் கரம்பிடித்துள்ளார். பின்னர், முதலிரவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

Salem

முதலிரவின் போது கவிதா 4 சவரன் நகை, வெள்ளி கொலுசு, ரொக்கம் என ரூ.2.5 இலட்சம் மதிப்புள்ள பணம் மற்றும் நகையுடன் ஓட்டம் பிடித்துள்ளார். தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த செந்தில் கெங்கனாவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை ஏற்பது போல் பாவனை செய்த அதிகாரிகள், கவிதாவின் தரப்பில் வந்த வழங்கறிஞருடன் சேர்ந்து பஞ்சாயத்து செய்து இருக்கின்றனர். 

இதனால் மனமுடைந்துபோன செந்தில் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற அதிகாரிகள் கெங்கனாவரம் காவல் துறையினர் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளனர். இதன்பேரில் வழக்குப்பதிந்த அதிகாரிகள் தலைமறைவான கவிதாவை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.