குழந்தையில்லாத ஏக்கத்தில் இளம்பெண் விபரீத முடிவு.. கணவன் கண்ணீர் கதறல்.!

குழந்தையில்லாத ஏக்கத்தில் இளம்பெண் விபரீத முடிவு.. கணவன் கண்ணீர் கதறல்.!


salem-irumpalai-young-woman-suicide-due-to-feeling-baby

சேலம் நகரில் உள்ள இரும்பாலை, வட்டமுத்தாம்பட்டி கிராமம் மாரியம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் ராமச்சந்திரன். இவரின் மனைவி ரூபெஸ்டி (வயது 27). இந்த தம்பதிகளுக்கு கடந்த 2 வருடத்திற்கு முன்னர் திருமணம் நடைபெற்று முடிந்தது. 

ஆனால், தற்போது வரை குழந்தை இல்லை என்பதால், ரூபெஸ்டி மனதுடைந்து காணப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று இரவு நேரத்தில் ரூபெஸ்டி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த ராமச்சந்திரன் அலறித் துடித்துள்ளார்.

Salem

இதனைக்கேட்டு பதறியபடி வந்த அக்கம் - பக்கத்தினர், நிலைமையை புரிந்துகொண்ட இரும்பாலை காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், ரூபெஸ்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.