மனைவிக்கு பாலியல் தொல்லை.. தகப்பனை தீர்த்துக்கட்டிய மகன்..! சேலத்தில் தரமான சம்பவம்.!

மருமகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து அடைய நினைத்த மாமனார், மகனின் வாழ்க்கையை சீரழிக்க முயற்சித்த நிலையில், மனைவியின் மீது பாசம் கொண்ட கணவன் தந்தையை கொலை செய்த தரமான சம்பவம் சேலத்தில் நடந்துள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள நங்கவள்ளி, விருதாசம்பட்டி அருகேயிருக்கும் கருப்புகவுண்டர் காட்டுவளவு பகுதியை சார்ந்தவர் இராஜேந்திரன் (வயது 55). இவர் நெசவு தொழிலாளியாக இருந்து வருகிறார். இவரின் மகன் வீரமணி (வயது 28). இவர் கொத்தனாராக பணியாற்றி வருகிறார்.
இவர் கடந்த 2 வருடத்திற்கு முன்னதாக விருதாசம்பட்டி பகுதியை சார்ந்த மாலதி என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்ட நிலையில், இந்த தம்பதியினருக்கு தற்போது வரை குழந்தை இல்லை. ஊரில் வேலை இல்லாத காரணத்தால் குடும்பத்துடன் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள திருச்செங்கோடு பகுதிக்கு வீரமணி குடிபெயர்ந்துள்ளார். அங்கு வாடகை வீட்டில் அனைவரும் தங்கியுள்ளனர்.
வீட்டில் மாலதி சமையல் வேலைகளை கவனித்து வந்த நிலையில், வீரமணியின் தந்தை இராஜேந்திரன் நெசவு வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். வெட்டியாக இருந்த ராஜேந்திரனுக்கு மாலதியின் மீது ஆசை பெற, அவரை அடைய துடித்து மருமகள் என்றும் பாராமல் மோக பார்வையை வீசி, அவ்வப்போது அவரிடம் சில்மிஷ சேட்டையில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இதனால் பேரதிர்ச்சிக்கு உள்ளாகிய மாலதி, இனியும் இதுபோன்று நடந்தால் கணவரிடம் சொல்லிவிடுவேன் என எச்சரித்து இருக்கிறார். இதனையும் கண்டுகொள்ளாத ராஜேந்திரன், மகன் இல்லாத நேரங்களில் மருமகள் மாலதியிடம் தவறாக நடக்க முயற்சித்து இருக்கிறார். இந்த தகவலை மாலதி தனது கணவரிடம் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.
தந்தையின் செயல்பாட்டினால் வருத்தமடைந்த வீரமணி, இனி நாம் சொந்த ஊர் செல்வோம் என்று கூறி 3 மாதத்திற்கு முன்னதாக இராஜேந்திரனை திருச்செங்கோட்டில் விட்டுவிட்டு விருதாசம்பட்டிக்கு வந்துள்ளனர். சில நாட்களில் விருதாசம்பட்டிக்கு வந்த இராஜேந்திரன், மகனிடம் உனது மனைவி நடத்தை கெட்டவள் என்று பொய்சொல்லி குடும்பத்தை பிரிக்க முயன்றுள்ளார்.
மனைவியை நன்றாக புரிந்துகொண்ட கணவன், தனது தந்தையை மானாவாரியாக கிழித்து அங்கிருந்து அனுப்பி வைத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ராஜேந்திரன், மருமகள் பற்றி ஊராரிடம் தவறான செய்தியை சொல்லி புரளியை கிளப்பிவிட்டு சென்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வீரமணி கடும் கோபத்தில் இருக்க, நேற்று இரவு இராஜேந்திரன் தனது மகன் வீரமணியிடம் மருமகள் குறித்து தவறாக பேசியுள்ளார்.
வீரமணியோ "எனது மனைவியை நீ ஏன் அவதூறாக பேசுகிறாய்? நீ யார் என எனக்கு தெரியும். உனது தொல்லை தாங்காமல் தான் இங்கு வந்தோம், இங்கும் அவமானம் செய்கிறாய். குடும்பத்தில் கலவரத்தை ஏற்படுத்தி மானத்தை வாங்குகிறாய். எங்களை நிம்மதியாக வாழவிடு, நீ திருச்செங்கோட்டுக்கு சென்றுவிடு" என்று சத்தமிட்டுள்ளார்.
வீட்டில் இருந்து எங்கோ புறப்பட்டு சென்ற இராஜேந்திரன், இரவு 9 மணியளவில் மீண்டும் மகனின் வீட்டிற்கு வந்து தகராறு செய்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், இராஜேந்திரன் மருமகள் மீதுள்ள மோகத்தால் மகனையே தாக்கியுள்ளார். உச்சகட்ட ஆத்திரத்திற்கு சென்ற வீரமணி, வீடு கட்ட வைத்திருந்த சிமெண்ட் கல்லை எடுத்து தந்தையின் காலில் போட்டுள்ளார்.
சுருண்டு விழுந்த இராஜேந்திரனின் நெஞ்சு மற்றும் இடுப்பு பகுதியில் கல்லைத்தூக்கிப்போட்ட நிலையில், படுகாயமடைந்த இராஜேந்திரன் சம்பவ இடத்திலேயே செத்துப்போனார். பின்னர், இந்த விஷயம் தொடர்பாக நங்கவள்ளி காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்படவே, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் இராஜேந்திரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர், வீரமணியிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.