சசிகலாவின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தாமதமாக விடுதலை.! கர்நாடக சிறைத்துறை.!

சசிகலாவின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தாமதமாக விடுதலை.! கர்நாடக சிறைத்துறை.!


saiskala release date

சொத்துகுவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா கடந்த 2017ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார். சசிகலாவுக்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனையுடன் ரூ. 10 கோடியே 10 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.  கடந்த 18-ஆம் தேதி சசிகலாவின் அபராதமான 10 கோடியே 10 ஆயிரம் ரூபாய் செலுத்தப்பட்டது.

இதனையடுத்து நன்னடத்தை அடிப்படையில் சசிகலா முன்கூட்டி விடுதலை செய்யப்படுவார் என வழக்கறிஞர் பாண்டியன் தெரிவித்து வருகிறார். சசிகலா விடுதலை தினத்தன்று கர்நாடக சிறைத்துறை மேற்கொள்ளப்போகும் நடவடிக்கைகள் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரி 27-ஆம் தேதி சசிகலா விடுதலையாவது உறுதியாகியுள்ளது. மேலும், சசிகலா விடுதலை அன்று கர்நாடக சிறை நிர்வாகத்துக்கு அம்மாநில உளவுத்துறை அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.

sasikala 

சசிகலாவின் விடுதலையின் போது ஏராளமான தொண்டர்கள் சிறை வளாகத்தில் கூட வாய்ப்புள்ளது. இதனால் தொண்டர்கள் சிறை வளாகம் அமைந்துள்ள பகுதிகளின் எல்லையிலேயே தடுத்து நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. சசிகலாவின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தாமதமாக விடுதலை செய்ய கர்நாடக சிறைத்துறை  திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

சசிகலாவின் பாதுகாப்பை கருதி  மற்ற கைதிகள் இரவு 7.30 மணிக்கும், சசிகலாவை 9.30 மணிக்கும் விடுதலை செய்ய முடிவெடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.மேலும், சசிகலாவை கர்நாடக எல்லையான அத்திப்பள்ளி வரை அழைத்துவந்து அங்கு அவருக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வாகனத்தில் அனுப்பிவைக்க கர்நாடக காவல்துறை திட்டமிட்டுள்ளது.