தமிழகம்

நாட்டையே அதிரவைத்த கொடூர சம்பவம்! முதன்முதலாக ஆவேசமாக நடிகை சாய்பல்லவி வெளியிட்ட பதிவு!

Summary:

Saipallavi tweet about 7 year girl Abuse

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஏம்பல் கிராமத்தை சேர்ந்த நாகூரான் என்பவரது 7வயது மகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக  ராஜேஷ் என்ற 29 வயது நபரை போலீசார் கைது செய்துள்ளனர். இத்தகைய கொடூர சம்பவத்திற்கு பிரபலங்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகை சாய் பல்லவி இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அந்த பதிவில் அவர் கூறியதாவது, மனித இனத்தின் மீதான நம்பிக்கை வேகமாக மோசமடைந்து வருகிறது. குரலற்றவர்களுக்கு உதவ வழங்கப்பட்ட அதிகாரத்தை தவறாக பயன்படுத்துகிறோம். நாம் பலவீனமாகக் காணும் மக்களை  காயப்படுத்துகிறோம். தங்களது கொடூரமான இன்பங்களை பூர்த்தி செய்ய குழந்தைகளை கொல்கிறோம்.

நாம் கடந்து செல்லும் ஒவ்வொரு நாளும் மனிதஇனத்தை சுத்தமாக துடைக்கவேண்டும் என்று இயற்கை சொல்வது போல தெரிகிறது. இத்தகைய கொடூர நிகழ்வுகளை பார்த்தும், எதுவும் செய்ய முடியாத பயனற்ற  வாழ்க்கையையே வாழ்கிறோம். இந்த மனிதாபிமானமற்ற உலகம் மற்றொரு  குழந்தையின் பிறப்புக்கு தகுதியற்றது. 

குற்றம் வெளிச்சத்திற்கு வரும்போது அல்லது சமூக ஊடகங்களில் ட்ரெண்டானால்  மட்டுமே நீதி வழங்கப்படும் என்ற  ஒருநாள் வரக்கூடாது என்று நான் பிரார்த்திக்கிறேன். கவனிக்கப்படாமலும், பதிவு செய்யப்படாமலும் இருக்கும் அந்தக் குற்றங்கள் அனைத்தும் என்ன ஆகும். பல கொடூரமான குற்றங்கள் இருக்கும் ஒரு நிலைக்கு வந்துவிட்டதால், அதில் ஒன்றிற்கு ஹேஷ்டேக்கைப் பயன்படுத்த வேண்டியுள்ளது என ஆவேசமாக பதிவிட்டுள்ளார்.


Advertisement