தமிழகம்

சாத்தான்குளம் சிறுமி கொலை வழக்கு: இதுக்காகவா டா அந்த பிள்ளைய கொலை செஞ்சிங்க..? பதற வைக்கும் காரணம்..!

Summary:

Saaththankulam young girl murder case update

கடந்த சில நாட்களுக்கு முன்னர் சாத்தான்குளம் அருகே உள்ளே கல்விளை இந்திரா நகரை சேர்ந்த சிறுமி ஒருவர் கொலை செய்யப்பட்டு ஆத்தங்கரை அருகே ட்ரம்மில் வைத்து வீசப்பட்ட சம்பவம்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

டிவி பார்ப்பதற்காக பக்கத்துக்கு வீட்டிற்கு சென்று சிறுமி நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாத நிலையில் பின்னர் சடலமாக மீட்கப்பட்டார். சிறுமி பாலியல் கொடுமை செய்யப்பட்டு கொலைசெய்யப்பட்டாரா என கேள்வி எழுந்த நிலையில், சிறுமி பாலியல் கொடுமை செய்யப்படவில்லை என பிரேதபரிசோதனை அறிக்கை வெளியானது.

இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக போலீசார் இரண்டு இளைஞர்களை கைது செய்து விசாரணை நடத்தியதில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. குறித்த சிறுமி கொலை செய்த வாலிபரின் வீட்டிற்கு டிவி பார்க்க சென்றபோது, அந்த இளைஞர் வேறொரு நபருடன் தொலைபேசியில் சண்டை போட்டுள்ளார், அந்தநேரம் பார்த்து சேனலை மாற்றும்படி சிறுமி அந்த இளைஞரை தொல்லை செய்துள்ளார்.

இதனால் மேலும் ஆத்திரமடைந்த அந்த இளைஞர் தனது நண்பருடன் சேர்ந்து சிறுமியின் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளனர். பின்னர் வீட்டில் இருந்து ட்ரம்மில் சிறுமியின் உடலை மறைத்து தூக்கிச்சென்று வீசியதாக போலீசாரின் விசாரணையில் கூறியுள்ளனர்.

டிவி பார்க்க ஆசைப்பட்ட சிறுமியை, இரண்டு பேர் கழுத்தை நெரித்துக் கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.


Advertisement