எங்க ஏரியாவில் கடை வைத்தால் மாமூல் கொடுத்து தான் ஆகவேண்டும்! மெடிக்கல் கடைக்காரரை மிரட்டிய ரவுடி! போலீசார் அதிரடி! - TamilSpark
TamilSpark Logo
தமிழகம்

எங்க ஏரியாவில் கடை வைத்தால் மாமூல் கொடுத்து தான் ஆகவேண்டும்! மெடிக்கல் கடைக்காரரை மிரட்டிய ரவுடி! போலீசார் அதிரடி!

செங்கல்பட்டு மாவட்டம் மண்ணிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் வினோத்குமார். இவர், வண்டலூர் ஊராட்சி பகுதியில் மருந்து கடை வைத்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த ரவுடி சிலம்பரசன் என்பவர், வினோத் குமாரை செல்போனில் தொடர்புகொண்டு ரூ.50 ஆயிரம் கேட்டு மிரட்டியுள்ளார். இதுதொடர்பான ஆடியோ இணையத்தில் வைரலானது.

அந்த ஆடியோவில் ரவுடி சிலம்பரசன் தகாத வார்த்தையை பேசி வினோத் குமாரை மிரட்டியுள்ளார். ஆனால் வினோத்குமாரும் அவருக்கு மரியாதை கொடுத்தபடியே இப்போது பணம் இல்லை, நீங்கள் கேட்கும்  ரூ.50 ஆயிரம் என்னிடம் இல்லை என்னால் முடிந்த பணத்தை தருகிறேன் இரண்டு நாட்கள் அவகாசம் கொடுங்கள் எனவும் கெஞ்சியுள்ளார்.

ஆனால், சிலம்பரசன் கெட்டவார்த்தையில் திட்டியபடியே, எங்க ஏரியாவில் கடை வைத்தால் எனக்கு பணம் கொடுத்து தான் ஆகவேண்டும். நீ யாரிடம் வேண்டுமானாலும் புகார் செய். நா யாருக்கும் பயப்பட மாட்டேன் என மிரட்டி. உன்னை உன் குடும்பத்துடன் நிம்மதியாக வாழவிட மாட்டேன் என தகாத வார்த்தையில் மிரட்டியுள்ளார்.

இதுகுறித்து மருந்து கடைக்காரர் வினோத்குமார் அளித்த புகாரின்பேரில் ஓட்டேரி போலீசார் வழக்குப்பதிவு சிலம்பரசனை  தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சிலம்பரசன், ஆந்திராவுக்கு தப்பிச் செல்ல இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து போலீசார் விரைந்து சென்று சிலம்பரசனை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சிலம்பரசனிடம் இருந்து 3 செல்போன்கள், ஒரு கத்தி பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.


Advertisement


தொடர்புடைய செய்தி:


TamilSpark Logo