கழுத்தில் குத்தி காது வழியாக வெளியே வந்த முறுக்கு கம்பி..! உயிர் போகும் நிலையில் இருந்த 7 வயது சிறுவனை காப்பாற்றிய அரசு மருத்துவர்கள்..!

கழுத்தில் குத்தி காது வழியாக வெளியே வந்த முறுக்கு கம்பி..! உயிர் போகும் நிலையில் இருந்த 7 வயது சிறுவனை காப்பாற்றிய அரசு மருத்துவர்கள்..!



Rod entered via throat at came out from ear

சிறுவனின் கழுத்தில் குத்திய கம்பி காதுவழியாக வெளியே வந்த நிலையில் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு கம்பியை வெளியே எடுத்து சிறுவனையும் கைப்பற்றியுள்ள சம்பவம் கோவையில் நடந்துள்ளது.

திருப்பூர் பாரதிபுரம் பகுதியைச் சேர்ந்த சிவராஜ் என்பவரது 7 வயது மகன் ரிதிகேஷ்வரன்.   அருகில் உள்ள பள்ளி ஒன்றில் மூன்றாம் வகுப்பு படித்துவரும் சிறுவன் தற்போது ஊரடங்கு என்பதால் வீட்டில் சிறு சிறு விளையாட்டுக்களை விளையாடி பொழுதை போக்கிவந்துள்ளான்.

இந்நிலையில் வீட்டுக்கு அருகே உள்ள மரத்தில் தொட்டில் கட்டி விளையாடிக் கொண்டிருந் சிறுவன் நேற்று முன்தினம் மரத்தில் ஏறிய போது எதிர்பாராதவிதமாக மரக்கிளை ஒடிந்து கீழே விழுந்துள்ளான். இந்த விபத்தில் கீழே கிடந்த தொட்டில் கம்பி சிறுவனின் கழுத்தில் குத்தி காதுவழியாக வெளியே வந்துள்ளது.

இதனை அடுத்து சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த பெற்றோர், சிறுவனை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளன்னர். உடனே அவசர சிகிச்சை பிரிவில் சிறுவனை அனுமதித்த மருத்துவர்கள் சி.டி. ஸ்கேன் செய்ததில் கொக்கி கம்பி ஒன்று சிறுவனின் கழுத்தில் குத்தி காது வழியாக வெளியே வந்திருப்பது தெரியவந்தது.

உடனே அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்த மருத்துவர்கள் நீண்ட நேர போராட்டத்திற்க்கு பிறகு கம்பியை வெளியே எடுத்து சிறுவனின் உயிரை காப்பாற்றியுள்ளனர். சிறுவனின் உயிரைக் காப்பாற்றிய மருத்துவர்களுக்குச் சிறுவனின் பெற்றோர் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர். மேலும், அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்களுக்கும் பாராட்டு குவிந்து வருகிறது.