தமிழகம்

கணவன் வெளிநாட்டில், மகளுடன் தனியாக வசித்து வந்த பெண்ணிற்கு காத்திருந்த பேரதிர்ச்சி! திடுக்கிடும் சம்பவம்!

Summary:

Robbery in perambalur area

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்தவர் பாலசுப்ரமணி. இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பானு. இவர்களுக்கு லட்சுமி பாலா என்ற மகள் உள்ளார்.அவர் பெரம்பலூரில் உள்ள தனியார் வேளாண் கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில் லட்சுமி பாலா அவரது தாய் பானுவுடன் பெரம்பலூர் அருகே அரணாரை ஏ. வி. ஆர் நகரில் வீடு எடுத்து தங்கி வந்துள்ளனர்.

 இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு லட்சுமி பாலா கல்வி சுற்றுலா சென்றுள்ளார்.அதனைத் தொடர்ந்து பானு வீட்டை நன்கு பூட்டிவிட்டு சொந்த ஊரான காரைக்குடிக்குச் சென்றுள்ளார். இந்நிலையில் நேற்று பானுவின் வீட்டில் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. பின்னர் இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் அவருக்கு தகவல் அளித்த நிலையில் உடனே விரைந்து வந்த அவர் வீட்டை ஆய்வு செய்ததில் 16 பவுன் நகைகள்,  30,000 பணம்,  வெள்ளி குத்து விளக்கு,  நான்கு ஜோடி கொலுசு,  டிவி,  வாட்ச் ஆகியவற்றை கொள்ளையர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. 

அதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார்கள் விரல் ரேகை நிபுணர்கள் மூலம் அங்கு கிடைத்த தடயங்களை சேகரித்தனர். 
இந்நிலையில் கணவர் வெளிநாட்டில் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் நிலையில் மர்மநபர்கள் அனைத்தையும் கொள்ளையடித்துச் சென்றதால் பானு கதறி அழுதுள்ளார். 

மேலும் அது மட்டுமின்றி அதே பகுதியில் வீட்டில் உள்ள மூன்று வீடுகளில் பணம், நகை, வெள்ளிப் பொருள்கள், வீட்டுசாதனங்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.இதனை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட அனைவரும் ஒரே கும்பலை சேர்ந்தவர்களா என தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


Advertisement