தமிழகம்

ஆசையாக திருட வந்த திருடனுக்கு வாசலில் காத்திருந்த பெரும் அதிர்ச்சி! தலையில் அடித்துக்கொண்டு திரும்பிய சம்பவம்.

Summary:

Robber went back after finding cctv camera

தாம்பரம் சானடோரியம் பகுதியில் வசித்து வருபவர்கள் ஸ்ரீதர் - லாவண்யா தம்பதியினர். இவர்கள் வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றிருந்த நிலையில், வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த கொள்ளையன் ஒருவன் அதிகாலை இரண்டரை மணி அளவில் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றுள்ளான்.

உள்ளே சென்று கொள்ளையடிக்கலாம் என மகிழ்ச்சியில் இருந்த கொள்ளையனுக்கு வீட்டின் வாசலில் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. வீட்டின் முன்பக்கமாக பொருத்தப்பட்டிருந்த CCTV கேமிராவை பார்த்த கொள்ளையன் அதிர்ச்சியடைந்து தலையில் அடித்துக் கொண்டான்.

மேலும், தனது முகம் CCTV யில் பதிவாகிவிட்டதே என்ற அச்சத்தில் அந்த வீட்டில் கொள்ளை அடிக்காமல் தனது தலையில் அடித்துக்கொண்டு வெளியேறும் காட்சிகள் அந்த கேமிராவில் பதிவாகியுள்ளது.

கொள்ளையடிக்க வந்துவிட்டு, சிசிடிவியால்  திருடாமல் திரும்பிச் சென்ற கொள்ளையன் குறித்து  குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Advertisement