6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்.!retired school headmaster sexually harassing young girl

நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க, குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனைகளும் வழங்கப்படுகிறது. ஆனாலும், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை நாள்தோறும் நடந்து வருகிறது. இந்தநிலையில், பொள்ளாச்சியில் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரை போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.

பொள்ளாச்சி பத்ரகாளியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் எபினேசர் (74). ஓய்வு பெற்ற தலைமையாசிரியரான இவர், பொள்ளாச்சி அருகே உள்ள பகுதியைச் சேர்ந்த 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து பாதிப்படைந்த சிறுமி தனது தாயாரிடம் கூறி அழுதுள்ளார்.

இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாயார், பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் ஓய்வு பெற்ற தலைமையாசிரியரான எபினேசர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்து செய்து சிறையில் அடைத்தனர்.