அனைத்து தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்கள் சேர்க்கை! யாரும் மிஸ் பண்ணிடாதீங்க! விண்ணப்பிக்க கடைசி தேதி அறிவிப்பு!reservation for school students in private school

25 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் ஏழை எளிய குழந்தைகள் தனியார் பள்ளிகளில் சேர்ப்பது தொடங்க வேண்டும்.  அதேபோல் ஒவ்வொரு பள்ளியும் இடங்கள் குறித்த பட்டியல்களை 17ம் தேதி தயாரிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அறிவித்திருந்தார்.

இதற்காக ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் 27ம் தேதி முதல்  செப்டம்பர் 25ம் தேதிவரை முதல் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்துத் தனியார் பள்ளிகளிலும் ஏழை குழந்தைகளுக்கு எல்கேஜி அல்லது 1-ம் வகுப்புகளில், குறைந்தபட்சம் 25 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு மாணவர் சேர்க்கை வழங்கப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

private school

மேற்கண்ட இட ஒதுக்கீட்டின் கீழ் தகுதி பெறும் மாணவர்கள் மற்றும் தகுதியற்ற மாணவர்கள் குறித்த விவரங்களை  செப்டம்பர் 30ம் தேதி தங்கள் பள்ளிகளில் தகவல் பலகையில் வெளியிடுவதுடன், பள்ளிக்கல்வித்துறை இணைய தளத்திலும் வெளியிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே வரும் 2020-2021 ஆம் கல்வியாண்டில் தனியார் பள்ளிகளில் எல்கேஜி அல்லது  1-ம் வகுப்புகளில் 25 சதவீத ஒதுக்கீட்டில் சேர விரும்பும் மாணவர்கள் நாளை( ஆகஸ்டு-27) முதல் செப். 25-ம் தேதி வரை rte.tnschools.gov.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.