ரொம்ப தப்புங்க..! இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும்.! முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை.!

ரொம்ப தப்புங்க..! இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும்.! முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை.!


remdecivir-if-you-sell-on-the-black-market-the-goonda-l

தமிழகத்தில் கொரோனா 2-வது அலையின் தாக்கம் நாளுக்கு நாள்உச்சம் அடைந்து வருகிறது. தமிழகத்தில் தற்போது தினசரி கொரோனா பாதிப்பு 31 ஆயிரத்தை கடந்துள்ளது. இந்தநிலையில், கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

கொரோனா நோயாளிகள் ஆபத்தான கட்டத்தில் இருக்கும்போது அவர்களுக்கு ரெம்டெசிவிர் மருந்து செலுத்தப்படுகிறது. ஆனால் இந்த மருந்து போதுமான அளவு கிடைப்பது இல்லை. இதன் காரணமாக கடந்த சில நாட்களாகவே ரெம்டெசிவிர் மருந்துக்காக மக்கள் அலைமோதும் நிலை உள்ளது. இதனை பயன்படுத்தி கூடுதல் விலைக்கு மருத்துவத்துறை பணியாளர்கள் கள்ளச்சந்தையில் விற்று வருவதாக புகார் எழுந்தது. 

corona

ரெம்டெசிவிர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான சட்டப்பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு வருவதாகவும் எனவே அதுபோன்ற சட்டவிரோத செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம் என்றும் சிவில்சப்ளை சி.ஐ.டி. போலீஸ் அதிகாரி வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்த நிலையில் தற்போது முதல்வர் மு.க.ஸ்டாலின், இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.