
Red alert for important places in chennai
தமிழகத்தில் நேற்றுவரை 50 ஆக இருந்த கொரோனா பாதிப்பு தற்போது 67 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சீனாவின் உஹான் நகரில் இருந்து பரவ தொடங்கிய இந்த கொரோனா வைரஸினால் இதுவரை 33 ஆயிரத்துக்கும் ஆதிகமானோர் உலகளவில் உயிர் இழந்துள்ளனர். வளர்ந்த நாடுகள் முதல் வளரும் நாடுகள் வரை அணைத்து நாடுகளும் கொரோனாவால் பெரும் இழப்புகளை சந்தித்துவருகிறது.
இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், நாடு முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்திலும் கொரோனா எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து நேற்றுவரை 50 ஆக இருந்த பாதிப்பு இன்று 67 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், சென்னையின் முக்கிய பகுதிகளான, அரும்பாக்கம், புரசைவாக்கம், விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, மேற்கு மாம்பலம், சாந்தோம், ஆலந்தூர், போரூர், கோட்டூர்புரம் ஆகிய இடங்களுக்கு ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின.
தற்போது இதுகுறித்து விளக்கமளித்துள்ளது சென்னை மாநகராட்சி. இந்த பகுதிகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உண்மைதான் எனவும், அதற்காக கண்காணிப்பு மையங்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டுவருவதாகவும், ஆனால், ரெட் அலர்ட் ஏதும் இந்த பகுதிகளுக்கு போடப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
வாட்ஸப்பில் வெளியாகும் தவறான செய்திகளால் மக்கள் அச்சமடைய வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், சென்னையின் எந்த பகுதிக்கும் ரெட் அலர்ட் இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement