தமிழகம்

ஹோட்டலில் வாங்கிய சாப்பாடு.. பாதி சாப்பிட்டு முடித்தபின் காத்திருந்த அதிர்ச்சி.. உள்ளே என்ன இருந்தது தெரியுமா?

Summary:

ஹோட்டலில் வாங்கிய சாம்பாரில்  எலிகுஞ்சு இறந்து கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹோட்டலில் வாங்கிய சாம்பாரில்  எலிகுஞ்சு இறந்து கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உடுமலைப்பேட்டையை சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் உடல்நல குறைவால் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். அவருக்கு உதவியாக அவரது சகோதரி திவ்யா என்பவர் மருத்துவமனையில் அவர் அருகில் இருந்து கவனித்துவந்துள்ளார்.

இந்நிலையில் தனக்கும், தனது சகோதரனுக்கும் சாப்பாடு வாங்குவதற்காக மருத்துவமனைக்கு எதிரே உள்ள டேஸ்டி என்ற உணவகத்திற்கு சென்று ஆப்பம், சாம்பார் ஆகியவற்றை வாங்கி சென்றுள்ளார். பின்னர் தான் வாங்கின்சென்ற சாப்பிட்ட பிரித்து தம்பிக்கு சாப்பிட கொடுத்துவிட்டு, மீதி இருந்த உணவை திவ்யா சாப்பிட முயன்றுள்ளர்.

அப்போதுதான் அவருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அவர் வாங்கி சென்ற சாம்பாரில் எலி குஞ்சு ஒன்று செத்து கிடந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் சாப்பாடு பார்சலை எடுத்துக்கொண்டு ஹோட்டல் உரிமையாளரிடம் வந்து  முறையிட்டுள்ளார். ஆனால் அவர்கள் உரிய பதில்  அளிக்காமல் எலி இருந்த பொட்டலத்தை வாங்கி வைத்ததாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து இருவருக்கும் வாக்குவாதம் முற்றியநிலையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் இதுதொடர்பாக உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சம்மந்தப்பட்ட உணவகத்திற்கு சென்று சோதனை செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாகவும் விசாரணைக்கு பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்  எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement