இரயில் எஞ்சின் மீது ஏறி கெத்துக்காட்ட நினைத்தவருக்கு ஷாக் கொடுத்த ஹைவோல்ட் மின்சாரம்.. பகீர் வீடியோ வைரல்.!

இரயில் எஞ்சின் மீது ஏறி கெத்துக்காட்ட நினைத்தவருக்கு ஷாக் கொடுத்த ஹைவோல்ட் மின்சாரம்.. பகீர் வீடியோ வைரல்.!


Ramanathapuram Train High Volt Power Electric Attack

இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரனின் நினைவிடம் உள்ளது. ஆண்டுதோறும் செப் 11 ஆம் தேதி பரமக்குடிக்கு பல அரசியல் மற்றும் அரசு அதிகாரிகள் வந்து இமானுவேலின் நினைவிடத்தில் மரியாதையை செலுத்திவிட்டு செல்வது வழக்கம். 

இந்த நாளில் அவர் சார்ந்த சமுதாய மக்கள் பரமக்குடிக்கு அதிகளவு வருகை தருவார்கள் என்பதால், சமூக ரீதியான மோதலை தவிர்க்க 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், இமானுவேல் சேகரனாரின் நினைவிடத்திற்கு வந்த இளைஞர் செய்த அட்டகாசத்தால் அவரின் உயிர் ஊசலாடுகிறது.

Watch Video: https://fb.watch/ftFMRJJPit/

பரமக்குடி இரயில் நிலையத்தில் நின்று கொண்டு இருந்த இரயில் எஞ்சினின் மீது ஏறி தனது சார்பு கொடியை அசைத்தார். அப்போது அவரின் மீது மின்சாரம் பாயவே, அவர் தூக்கி வீசப்பட்டார். படுகாயமடைந்த அந்த இளைஞர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டார். இதுகுறித்த வீடியோ வைரலாகி வருகிறது.