தமிழகம் சினிமா

புறப்பட்டார் ரஜினிகாந்த்.. இந்த சூழ்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் அமெரிக்கா செல்ல என்ன காரணம் தெரியுமா??

Summary:

உடல் பரிசோதனைக்காக நடிகர் ரஜினிகாந்த் அமெரிக்கா சென்றுள்ளார்.

உடல் பரிசோதனைக்காக நடிகர் ரஜினிகாந்த் அமெரிக்கா சென்றுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்திற்கு அமெரிக்காவில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டநிலையில், அவர் அவ்வப்போது அமெரிக்கா சென்று தனது உடல்நிலையை பரிசோதித்து வருவது வழக்கம். ஆனால் அண்ணாத்த படப்பிடிப்பு காரணமாகவும், கொரோனா சூழல் காரணமாவும் ரஜினியால் அமெரிக்கா செல்ல முடியமால் இருந்தது.

தற்போது அண்ணாத்த படப்பிடிப்பை ரஜினிகாந்த் வெற்றிகரமாக முடித்துள்ளார். அதேநேரம் அமெரிக்காவிலும் கொரோனா தொற்று வெகுவாக குறைந்துள்ளதால், தனது உடல் பரிசோதனைக்காக தற்போது நடிகர் ரஜினிகாந்த் அமெரிக்கா சென்றுள்ளார்.

அமெரிக்கா செல்ல மத்திய அரசிடம் சிறப்பு அனுமதி பெற்றுள்ள நடிகர் ரஜினிகாந்த், தனி விமானம் மூலம் இன்று அமெரிக்கா புறப்பட்டு சென்றார். அமெரிக்காவில் மூன்று மாதங்கள் தங்கி அங்கு அவர் ஓய்வெடுக்க இருப்பதாகவும், மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது.


Advertisement