தமிழகம் சினிமா

தமிழக அரசுக்கு பாராட்டு.. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவித்தொகை.. ரஜினிகாந்தின் அசத்தல் அறிக்கை!

Summary:

Rajini praises tn government for corono activities

உலகம் முழுவதும் பரவி பல உயிர்களை பலி வாங்கி இன்னும் அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கொடிய கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

தமிழகத்தில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் மிகுந்த பாதுகாப்புடன் பயணிகள் சோதனை செய்யப்படுகின்றனர். மேலும் மக்கள் அதிகமாக கூடுவதை தடுக்க பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இத்தகைய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் தமிழகத்தில் இதுவரை 2 நபர்கள் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிலும் ஒரு நபர் குணமாகி வீடு திரும்பிவிட்டார்.

தமிழக அரசின் இத்தகைய நடவடிக்கைக்கு ரஜினிகாந்த் ட்விட்டர் வாயிலாக பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும் அரசோடு சேர்ந்து நாமும் இணைந்து இந்த கொடிய நோய் பரவாமல் தடுக்க ஒத்துழைக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்த இக்கட்டான சூழ்நிலையில் அடிப்படை வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு உதவித்தொகை அளித்தால், அது அவர்களுக்கு பேருதவியாக இருக்கும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


Advertisement