அரசியல் தமிழகம் இந்தியா

ரஜினி செய்த காரியாதல் குவியும் வாழ்த்துக்கள்! என்ன செய்துள்ளார் தெரியுமா?

Summary:

Rajini donated house to kaja affected people

கஜா புயல் ஆடிய கோரத்தாண்டவம் யாராலும் மறக்க முடியாத ஓன்று. கஜா புயலால் தஞ்சை, நாகை, திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை போன்ற மாவட்டங்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. ஏராளமான வீடுகள் சேதமடைந்தன, பலரது வீடுகள் இடிந்து விழுந்தன.

இந்நிலையில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசும், மக்களும் பல்வேறு உதவிகள் மற்றும் நிவாரண பொருட்களை வழங்கினர். இதுகுறித்து பேசிய நடிகர் ரஜினி கஜா புயலால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்தவர்களுக்கு வீடு கட்டி தரவேண்டும் என்றும், நம்மால் முடிந்த உதவிகளை செய்யவேண்டும் என கூறியிருந்தார்.

இதனை அடுத்து, நாகை மாவட்டத்தில் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் வீடுகள் கட்டும் பணி நடைபெற்றது. தற்போது அந்த பணிகள் முடிவடைந்து கஜா புயலால் பாதிக்கப்பட்ட 10 பேருக்கு நடிகர் ரஜினிகாந்த் புது வீடுகளை வழங்கினார்.

சென்னை போயஸ் கார்ட்டனில் உள்ள தனது வீட்டிற்கு அவர்களை வரவைத்து புது வீட்டிற்கான சாவிகளை ரஜினிகாந்த் வழங்கினார். ரஜினியின் இந்த செயலுக்கு பலரும் தங்கள் பாராட்டை தெரிவித்துவருகின்றனர்.


Advertisement