தமிழகத்தில் இடிமின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!!

தமிழகத்தில் இடிமின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!!



Rain with thunder in tamilnadu

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று இடிமின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பான செய்திதொகுப்பில், 14ஆம் தேதியான இன்று தமிழ்நாடு, காரைக்கால் மற்றும் புதுவை பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தலைநகர் சென்னையை பொறுத்தவரை அடுத்து 48 மணிநேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒரு சில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கணித்துள்ளது. அதிகபட்ச வெப்பநிலையானது 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலையானது 27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

Rain alert

மீனவர்களுக்கான எச்சரிக்கையாக மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென்தமிழக கடலோர பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் இடையிடையில் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் பலத்தகாற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எச்சரிக்கப்பட்டுள்ளது.