தமிழகம்

மேலும் 4 நாட்களுக்கு வடகிழக்கு பருவமழை தொடரும் - வானிலை ஆய்வுமையம் தகவல்!

Summary:

Rain update for next four days

சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அக்டோபர் முதல் டிசம்பர் 31 வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வழக்கத்தை விட 2 சதவீதம் கூடுதலாக மழை பெய்துள்ளதாகவும், சென்னையில் வழக்கத்தை விட 17 சதவீதம் மழை குறைந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

சென்னையை பொறுத்தவரை 759 மில்லிமீட்டர் மழை பெய்ய வேண்டிய நிலையில் 633 மில்லிமீட்டர் மட்டுமே பெய்துள்ளதாக அவர் கூறியுள்ளார். மேலும் கடந்த 1996 ஆண்டுக்கு பிறகு தற்போதுதான் இந்திய பெருங்கடலின் இருமுனை பகுதிகளிலும் அதிக அளவு மழை பெய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் அடுத்த நான்கு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தென்மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.


Advertisement