மீண்டும் வருகிறது மழை! எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா? வானிலை ஆய்வு மையம் தகவல்!

மீண்டும் வருகிறது மழை! எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா? வானிலை ஆய்வு மையம் தகவல்!



Rain update for chennai and tamilnadu

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல இடங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது. இதனை அடுத்து கடந்த ஓரிரு நாட்களாக மழை சற்று குறைந்து மீண்டும் வெயில் தலைகாட்ட தொடங்கியுள்ளது.

இந்நிலையில் கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களின் சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Rain update

மேலும், குமரிக்கடல் பகுதியில் நிலவி வரும் வளிமண்டல சுழற்சியின் காரணமாக நாகப்பட்டினம், சிவகங்கை, புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை  பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்ய வைப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.