தமிழகம்

சென்னையில் கொட்டி தீர்க்கும் மழை: வாகன ஓட்டிகள் அவதி!.

Summary:

rain started in chenai


தமிழகத்தில் காற்றழுத்த சுழற்சியால் தமிழகத்தில் 3 நாட்கள் பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

வங்கக்கடலின் தென் கிழக்கு பகுதியில் புதிய கிழக்கு திசை காற்று உருவாகியுள்ளது. இது வலுப்பெற்று விரைவில் தமிழகத்தில் கரையை கடக்கலாம். இதன் காரணமாக இன்று டிசம்பர் 3 முதல் 4, 5, 6 ஆகிய தேதிகளில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தொடர்ந்து மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதெர்மன் தெரிவித்துள்ளார்.


தெற்கு ஆந்திராவிலும் இன்று மாலை முதல் மழை பெய்யும். சென்னை உள்ளிட்ட வட தமிழக கடல்பகுதியில் 3-ம் தேதி மாலை மழை தொடங்கும்.  4 -ம் தேதி அதிகாலை முதல்  5 -ம் தேதி வரை பரவலாக மழை பெய்யும். வட தமிழகத்தில் ஒரளவு கனமழைக்கும் வாய்ப்புள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் கணிசமான அளவு மழையை எதிர்பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று மழை 5 40 மணியில் இருந்து சென்னையில் மழை பெய்துவருகிறது. இந்த மழை பெய்யும் நேரம், மக்கள் அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பும் நேரம் என்பதால் சாலை ஓரங்களில் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.


Advertisement