
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெப்பம் மக்களை வாட்டி வதைக்கிறது. சுட்டெரிக்கும் வெயில
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெப்பம் மக்களை வாட்டி வதைக்கிறது. சுட்டெரிக்கும் வெயிலினால் பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கி கிடக்கிறார்கள். இந்தநிலையில், கடந்த 2 நாட்களாகவே தமிழகத்தின் சில இடங்களில் மழை பெய்துவருகிறது. இந்தநிலையில் வானிலை ஆய்வு மையம் மேலும், ஒரு மகிழ்ச்சியான செய்தியை அறிவித்துள்ளது.
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனையொட்டிய லட்சத்தீவு, மாலத்தீவு பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் நாளைமுதல் 4 நாட்களுக்கு தமிழகம், கேரளா, கர்நாடகாவில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும் தமிழகத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசியி மற்றும் நீலகிரியில் கனமழை பெய்யக்கூடும் எனவும், தற்போது உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி, புயலாக வலுப்பெறும் எனவும் வானிலை மையம் கணித்துள்ளது. புயல் உருவாக வாய்ப்பிருப்பதால் அரபிக்கடலில் மீன்பிடிக்க செல்லவேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement