தமிழகம்

தென் மேற்கு பருவமழை தீவிரம்! தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு!

Summary:

rain in tamilnadu

மத்திய பிரதேசத்தின் மேற்கு மற்றும் கிழக்கு உள்ளிட்ட பகுதிகளில் தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருவதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் தீவிரமாக மழை பெய்து வருகிறது.

கடந்த ஒரு வாரமாக கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் இன்றும் நாளையும் பல இடங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வடதமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்காலிலும் மழைபெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலையில் சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் நல்ல மழை பெய்யும் என்றும், சூறாவளி காற்று வீசலாம் என்பதால் கேரளா, லட்சத்தீவு உள்ளிட்ட பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


Advertisement