தமிழகம்

தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் கொட்டித்தீர்க்கவிருக்கும் கனமழை! வானிலை ஆய்வு மையம் தகவல்!

Summary:

rain in tamilnadu

 

தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் எனவும், ஒருசில இடங்களில் மழை பெய்யும் எனவும் வானிலை மையம் தெரிவித்திருந்தது. 

இந்தநிலையில் தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்று நள்ளிரவு தொடங்கி கனமழை காலை முதல் நீடித்து வந்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. சென்னையில் கோயம்பேடு, கோடம்பாக்கம், வடபழனி, அசோக் நகர், விருகம்பாக்கம், வேளச்சேரி, அடையாறு, பட்டினம்பாக்கம், திருவான்மியூர், தரமணி, பள்ளிக்கரணை, மேடவாக்கம், தாம்பரம்  ஆகிய பகுதியில் பலத்த மழை பெய்தது.

இந்தநிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இரண்டு நாட்களுக்கு மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


Advertisement