தமிழகம்

தமிழகத்தில் 18 மாவட்டங்களில் இன்று வெளுத்து வாங்கவிருக்கும் மழை! வானிலை ஆய்வு மையம் தகவல்!

Summary:

rain in tamilnadu


தென்மேற்குப் பருவமழை காரணத்தினால் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்தது, ஆனால் சென்னையில் ஏமாற்றம் அளித்துள்ளது. சராசரியை விட குறைவான அளவே மழை பெய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு ஒரு சில இடங்களில் இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. 

இந்தநிலையில் சென்னையில் நேற்று தொடர்ந்து  2 மணி நேரமாக பல இடங்களில் பலத்த மழை பெய்தது. இந்தநிலையில், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக,கடலூர், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், கரூர், திருச்சி, சேலம், நீலகிரி, மதுரை, தேனி, திண்டுக்கல், தஞ்சாவூர், திருவாரூர், தூத்துக்குடி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மேலும், ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழைவாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


Advertisement