"மோசமான அணுகுமுறை" சாம்சங் தொழிலாளர்கள் கைதுக்கு இயக்குனர் பா. ரஞ்சித் கண்டனம்..!
தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு.!
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதிலிருந்தே பெரும்பாலான மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்று முன்தினம் சிறிது நேரம் மழை, சிறிது நேரம் வெயில் என இருந்தது. இந்தநிலையில் தமிழகத்தில் இன்று மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
காற்றின் திசைவேக மாறுபாடு காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் புதுக்கோட்டை, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, சிவகங்கை, தூத்துக்குடி ஆகிய 6 மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என்றும், ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் எனவும், பெரும்பாலான மாவட்டங்களில், வறண்ட வானிலை நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் , சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னையில் அதிகபட்சம், 33 டிகிரி செல்ஷியஸ் மற்றும் குறைந்தபட்சம், 25 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவாகும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.